Thursday, February 28

ஹாலுக்கு பெறப்பட்ட நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது என விளக்கமளிக்க:ஓமல்பே







ஹலால் சான்றிதழ் மூலம்  கடந்தகாலங்களில் பெறப்பட்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து  ஊடகங்கள்  வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளிப்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தெரியாத்தனமாக ஹலால் எனும் வரியை செலுத்தி வந்துள்ள சிங்கள பெளத்தர்களுக்கு அது தொடர்பில் தெரிந்து கொள்ள பூரண உரிமை உள்ளது. எனவே அது தொடர்பில் உலமா சபை வெளிப்படுத்த வேண்டும்.
ஹெல உறுமய உள்ளிட்ட எந்தவொரு பெளத்த அமைப்பும் ஹலாலை எதிர்க்கவில்லை. எனினும் ஹலாலை எம்மீது திணிப்பதையே நாம் எதிர்க்கிறோம். இலங்கையை இன்னுமொரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றுவதற்கு இடமளிக்கமுடியது.

இது சிங்கள பெளத்த நாடு. பெளத்தர்களின் நல்லெண்ணம் காரணமாகவே  இங்கு  முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment