இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும்போக்கு புத்தமதக் குழுக்கள்
செயற்படுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்,
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டித்திருக்கிறார்.
ஹலால் விவகாரம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் பீபீசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,
ஹலால் விவகாரம் தொடர்பில் இன்னும் ஓரிரு அமர்வுகளில் தமது சிபாரிசுக அரசிற்கு முன்வைக்கவுள்ளோம்.
ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுந்த ஹக்கீம் அரசாங்கம் தயக்கம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என தாம் கூறியதாகவும், இவ்விவகாரம் சிறுபான்மை இனமக்கள் மத்தியில் வித்தியாசமான மனநிலையை உருவாக்கி வருகிறது என்ற அபாய எச்சரிக்கையை ஏற்கனவே அரசாங்கத்திற்கு விடுத்திருந்தோம்.
ஹலால் பிரச்சினை வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கென்றே குதர்க்கமாக வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையான விசயம்.
இவ்வாறான சூழலை வளர விடுவது அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல.
இந்த நிலையினை அரசாங்கம் புரிந்து கொண்டு உடனடியாக காத்திரமான தீர்வினை எட்டவேண்டிய கடப்பாட்டிற்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் பலனாகத்தான் அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹலால் பிரச்சினையை வைத்து நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் தடுப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை.
அரசாங்கத்திலுள்ள இனவாதக் கட்சிகள் கூட ஹலால் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைத் தொடர் நடைபெறுகின்ற நிலையில் இவ்வாறான பிரச்சினைகள் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கு நல்லதல்ல.
இந்நிலைமையிக்கு அரசு காத்திரமாக நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான விசம சக்திகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தாங்கள் முயற்சிக்கிறார்கள் என்பது குறித்த நிலைப்பாட்டை வெளிக்கொண்டுவர முடியும்.

No comments:
Post a Comment