|
|||||||||||||||||||||||||||||
|
குருநாகலை மாவட்டத்தின் தித்தவல்கல பள்ளிவாசலின் சுவரில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை குறித்த பள்ளிவாசலின் சுவரில் முஸ்லிம்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட குறித்த சுவரொட்டிகளை அவதானித்த முஸ்லிம்கள் இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர் . இதனை அடுத்து முஸ்லிம் கவுன்சிலினால் பிரதேச பொலிசாரின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்தலத்துக்கு விரைந்த பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி அனுர குணவர்த்தன ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை உடனடியாக அகற்றியுள்ளார். அத்துடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இதனிடையே குறித்த பிரதேசத்தின் இன நல்லுறவை கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பில் நாளைய தினம் விஷேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன | |||||||||||||||||||||||||||||
Wednesday, March 20
குருநாகலை பிரதேச பள்ளிவாசல் சுவரில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டி
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment