பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பென்சி கடையொன்றில் புத்தரின்
உருவம் பொறிக்கப்பட்ட கையுறை சோடியொன்றை விற்பனை செய்ததாக கூறப்படும்
சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு மீண்டும் மே மாதம் 28 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்குத்தொடுனரான பொது பல சேனா அமைப்பின் பதுளை செயற்பாட்டாளர்கள் இன்றைய வழக்கு விசாரணைகளில் ஆஜராகததை தொடர்ந்தே நீதிமன்றம் குறித்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.
கடந்தமுறையும் வழக்கு விசாரணைகளில் குறித்த தரப்பு ஆஜராகததன் விளைவாக வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் பெண் சட்டத்தணி மட்டும் இன்றைய தினம் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இவர் குறித்த வழக்கின் முதல் அமர்வில் எவ்வித கட்டணங்களையும்
அறவிடது பொது பல சேனா தரப்புக்காக வாதாடியிருந்தமைக்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment