குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் யுவதியொருவர் அங்கு வேலை செய்யும்
ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியே நேற்று
அந்நிறுவனத்தின் பெபிலியான களஞ்சியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் அவ்வாறான எந்தவொரு துஷ்பிரயோக சம்பவமும் தமது நிறுவனத்தினுள்
இடம்பெறவில்லை என குறித்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவ்வாறான எந்த சம்பவமும் அங்கு நிகழவில்லை என்பதை நேற்றைய தினம்
தாக்குதலின் போது ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் உறுதிப்படுத்தியதாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
தொடர்பான பதிவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில்
துல்லியமாக பதிவாகியுள்ளதாகவும் அதனை அடிப்படையாக வைத்து தற்போது பொலிசார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த தாக்குதலை பெளத்த பிக்குகளின் தலைமையிலான குழுவினரே முன்னின்று நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
|
Friday, March 29
பெஷன் பக் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - போலீசார்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment