புத்த பெருமான் இந்தியாவில் பிறந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள்
எதுவும் இல்லாத நிலையில், புத்தர் இலங்கையில் பிறந்ததற்குண்டான போதிய
ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ரத்மலான தர்ம ஆய்வகப் பணிப்பாளர்
ஹேகொட விபஸ்ஸி தேரர்,
தேசிய ஹெல உறுமய அமைப்பின் முந்நாள் பாராளுமன்ற
உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு
சவால் விடுத்திருக்கிறார்.
“புத்தர் இலங்கையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், புத்தர் பிறந்த
புனித இடத்தை தரிசிப்பதற்காக தம்பதிவ செல்லத் தேவையில்லை’ என்ற தொனிப்
பொருளில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி
பகிரங்க விவாதத்துக்கான சவாலையும் விடுத்தார். குறித்த ஊடகத்துக்கு கடிதம்
ஒன்றின் மூலம் கருத்தை வெளியிட்ட விபஸ்ஸி தேரர் அதில் தேலும்
தெரிவித்திருப்பதாவது,
2600 வருடங்கள் பழமை வாய்ந்த புத்தபெருமானின் பிறப்புக் குறித்த வரலாற்றைக்
கொச்சைப்படுத்தி கேளிக்கிடமாக்க வைத்திருப்பது குறித்து உடுவே தம்மாலோக்க
தேரர் வெட்கப்பட வேண்டும். தமிழ் டயஸ்போரா மூலம் மேற்கொள்ளப்படும் சதி
வலையில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக் கொண்டு செயல்படும் உடுவே தம்மாலோக்க
தேரர், நான் மேலே விடுத்திருக்கும் சவாலை ஏற்று இன்றே பகிரங்க
விவாதத்துக்கு வரும்படி அழைக்கின்றேன்.
சாதாரண பௌத்தர்களை பகடைக்காய்களாக வைத்து மேற்கொள்ளும் இந்த பௌத்த வரலாற்று
சிதைவை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு
புத்தசாசன அமைச்சு முன்வர வேண்டிய காலம் எழுந்திருக்கிறது என்றும் விபஸ்ஸி
தேரர் அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment