தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்ததாக பொலிஸாரால் கைது
செய்யப்பட்ட மகரகம அங்காடி முஸ்லிம் வியாபாரியும் அவருக்கு குறித்த ஆடைகளை
வழங்கிய சிங்கள வர்த்தகரும் 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி போயா தினத்தன்று மேற்படி முஸ்லிம் வியாபாரி தமது
விற்பனையில் ஈடுபட்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த ஒரு சில பௌத்த
தேரர்களும் மேலும் இருவரும் உள்ளாடைகள் சிலவற்றை தருமாறு கேட்டுள்ளனர்.
அதனை உன்னிப்பாக அவதானித்த அவர்கள் உள்ளாடையிலுள்ள இலாஸ்டிக்கில்
தர்மசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
சிங்கள வியாபாரி ஒருவரே தனக்கு இவ் உள்ளாடைகளை வழங்கியதாகவும் தர்மசக்கரம்
பொறிக்கப்பட்டிருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும் முஸ்லிம்
வியாபாரி பொலிஸில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதன் பின் குறித்த சிங்கள
வியாபாரியையும் கைது செய்த பொலிஸார் கங்கொடவில நீதிமன்றத்தில் 27 ஆம் திகதி
ஆஜர்படுத்தினர்.
முஸ்லிம் வியாபாரியிடம் விசாரிப்பதற்காக பௌத்த தேரர்கள் வந்த தனியார்
தொலைக்காட்சியொன்றின் படப்பிடிப்பாளரும் மேலும் சில
புகைப்படப்பிடிப்பாளர்களும் வந்து புகைப்படம் பிடித்தமை தொடர்பில் தமக்கு
சந்தேகம் நிலவுவதாகவும் ஏற்கனவே திட்டமிட்டே இந்த முயற்சி
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் வியாபாரி
தெரிவித்தார்.
No comments:
Post a Comment