Sunday, March 17

மியன்மார் பிரஜைகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் : சம்பிக்க


மியன்மார் - பங்களாதேஷ் இடையிலான எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் மோதல்கள் விளைவாக  தப்பியோடிய மியன்மார் முஸ்லிம்கள் தற்போது இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி அவர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அமைச்சர் பாட்டாலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 

மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக்கடி காரணமாக அந்த நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.அவர்கள் தற்போது, தெஹிவளை, ரத்மலானை, நுகேகொடை போன்ற பிரதேசங்களில்  வசித்து வருகின்றனர். அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ள அவர்கள், எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரதூரமான பிரச்சினையாக மாறுவர்கள்.

இதேவேளை மியன்மார் - பங்களாதேஷ் இடையிலான எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் மோதல்கள் விளைவாக  தப்பியோடிய மியன்மார் முஸ்லிம்கள் தற்போது இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி அவர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment