கண்டி மாநகர சபையின் மாடறுக்கும் மடுவத்தை மூடியமை தொடர்பில் கண்டி
நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியும் பதாதைகளை காட்சிப் படுத்தியும் கண்டி
மேயருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி சுதுஹூம்பொல மாட்டறுப்பு மடுவத்தை மூடியமைக்காக கண்டி மாநகரின் 18
வது நகரபிதா மகேந்திரரத்வத்தைக்கு எமதுபாராட்டுக்கள் - கண்டிவாழ் மக்கள்'என
குறித்த வாழ்த்து சுவரொட்டிகளிலும் பதாதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கண்டி மத்திய சந்தையில் அனுமதி பெற்ற சகல மாட்டிறைச்சிக்
கடைகளும் திறக்கப்பட்டு வழமை போல் வியாபாரம் நடை பெற்று வருகின்றமைக்
குறிப்பிடத்தக்கது.
.
No comments:
Post a Comment