அச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2007ம்
ஆண்டு ஹலால் சான்றிதழுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் பின் அது
இரத்துச் செய்யட்டதாகவும், இருப்பினும் பல வருடங்களாக மக்களை ஏமாற்றி உலமா
சபை நிதி சேகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவ் இணையம் சாதாரண குடி மகனுக்கு ஒரு சட்டமும் மற்றவர்களுக்கு இன்னொரு சட்டமுமா? எனக் கேட்டுள்ளது.
அமைச்சரவை
உப கமிட்டி மேற்படி விடயங்களைக் கண்டு பிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக
பிரதான நபரான ரிஸ்வி முப்தியை உடன் கைது செய்யும் படியும் அது கேட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் றிஸ்வி முப்திக்கு எதிரான இனவாத போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.
பௌத்தசிங்கள
இனவாதிகளும், அவை சார்பு இணையங்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
சபையையும், அதன் தலைவர் றிஸ்வி முப்தியையும் இலக்குவைத்து இனவாத
பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் நம்மில் சிலர் ஜம்மியத்துல் உலமா
சபைக்கு எதிராகவும், றிஸ்வி முப்திக்கு எதிராகவும் பேஸ்புக் மற்றும் சமூக
தளங்களில் அநாகரீகமாக எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது துரதிஷ்டவசமானது
என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரம்புகிறோம்.
No comments:
Post a Comment