Wednesday, March 13

ஹலால் சான்றிதழ் வழங்க உலமா சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை :இன்றைய ஊடக மாநாட்டில் தினேஷ்

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எந்த அதிகாரமுமில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள இன முரண்பாடுகள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அமைப்பும் சமயத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சட்டத்தை தமது கையில் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்  நாட்டின் சட்டமே தலையாயது. சமயத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இந்த பிரச்சினையில் மௌனமாக இருப்பது பற்றி கேட்டபோது அவர், அரசாங்கம் இன ஒற்றுமை பாதுகாப்பதில் கவனமாக இருந்தது என்றார்.

இந்த நாட்டில் இன மோதலொன்றை உருவாக்க நாம் விடமாட்டோம். இன மோதலை ஏற்படுத்துவதற்காக இடைவிடாது தொடர்ந்து முயற்சிக்கின்றவர்கள் பலர் உள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment