Wednesday, March 13

பாராளுமன்றத்தில் ஹலால் தொடர்பில் இன்று சூடான விவாதம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை குழு இன்று புதன்கிழமை, 13 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் கூடியுள்ளது.

இதன்போது ஹலால் தொடர்பில் மிக சூடான விவாதங்கள் நடைபெற்றுள்ளது. ஒருகட்டத்தில் புனித அல்குர்ஆனை ஆதாரமாககூறி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு இல்லையென வாதிட்டுள்ளார். இதன்போது குறிக்கிட்டுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அல்குர்ஆனை சுட்டிக்காட்டி உரையாற்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு அருகதை இல்லையென வாதிட்டுள்ளார்.

இதன்போது பல்வேறு கருத்துக்களும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்போது ஜம்மியத்துல் உலமா சபையானது ஹலால் சான்றிதழை உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு வழங்குவதில்லையென்ற தீர்மானம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஜம்மியத்துல் உலமா சபையின் தீர்மானம் தமக்கு உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லையென முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஹலால் தொடர்பில் ஆராயப்பட்ட அமைச்சரவை உபகுழுவானது அதன் அறிக்கையை விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கவுள்ளது. தற்போது அந்த அறிக்கை இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாகவும், அமைச்சரவை உபகுழுவினரின் சம்மதம் கிடைத்தபின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.

No comments:

Post a Comment