ஹலால் சான்றிதழ் வழங்குகின்றமையானது இஸ்லாம் மதத்திற்கு முரணானது. இதுவரை
காலமும் ஹலால் முறைமை வியாபார நோக்கத்திற்காகவும் இன பிளவுகளுக்காகவுமே
பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர்
முசம்மில் தெரிவித்தார்.
பன்றி எண்ணை தவிர்ந்த பால்மா உட்பட உணவுப் பொருட்களுக்கும் ஹலால்
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது. ஹலால் எனக்
கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் அமைப்பிற்கும் இடமளிக்க முடியாது
என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை
அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்
போதே முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
ஹலால் என்பது முஸ்லிம்களின் வாழ்க்கை முறையாகும். அதற்கு சான்றிதழை
வழங்கியது ஹராம் ஆகும். பண்டைய காலம் தொட்டு முஸ்லிம் மக்கள் ஹலால்
முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட அடிப்படைவாத
சபைகள் ஹலாலை உணவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி அதற்கு சான்றிதழ் வழங்கி
வியாபார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது.
எனவே அரசாங்கமும் ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உணவுப் பொருட்களின்
உள்ளடக்கம் தொடர்பில் அறிவிப்பை குறிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த
வேண்டும். அப்போது சகல இன மக்களும் தமக்கேற்ற உணவை பெற்றுக் கொள்ள
முடியும். வெறுமனே ஹலால் சன்றிதழை வழங்குவது முட்டாள்தனமாகும்.
மறுபுறம் கடந்த காலங்களில் ஹலால் சான்றிதழ் வியாபார நோக்கத்திற்காகவே
வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு பன்றி ஹராம். ஆனால் பன்றி எண்ணை கலந்த
பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது எனக்
கூறினார். |
No comments:
Post a Comment