Friday, March 1

தெமட்டகொட மாட்டிறைச்சி மடுவம் பெளத்த பிக்குகளால் முற்றுகை




கொழும்பு 09, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள மாட்டிறைச்சி விநியோகம் செய்கின்ற மடுவத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை பெளத்த பிக்குகள் முற்றுகையிட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை விற்பனைக்கான விநியோகம் செய்கின்ற மேற்படி இடம் பிக்குகளார் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை காணப்படுகின்றது.

அத்துடன் பொலிஸார் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். எனினும், அங்கு எந்தவிதமான முன்னேற்ற நடவடிக்கைளும் காணப்படவில்லையென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகைக்கு செல்வதற்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment