Friday, March 1

குருணாகல்: மெல்சிரிபுர பள்ளியத்த விஹாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டம்

குருநாகல் மாவட்டத்தில் மெல்சிரிபுர பள்ளியத்த என்ற விஹாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டம் ஒன்று நேற்று 28-02-2013 நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்திதின் போது மெல்சிரிபுர நகரில் 2 -03 – 2013 முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர். இதில் சுமார் 500 பேர் அளவில் சமுகளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மெல்சிரிபுர நகரில் இது குறித்த விளம்பரப் பதாதையொன்று போடப்பட்டுள்ளதாகவும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் தலையில் போட்டுள்ள தொப்பியை பலவந்தமாக கலட்டுகின்ற வகையில் சிறுசிறு சம்பங்களும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.. இந் நகரில் சிறு தொகையான முஸ்லிம் கடைகளே உள்ளன. ஞாயிற்றுக் கிழமை வாராந்த சந்தை நடைபெறும் நாட்களில்; நகருக்கு பெருந்தொகையான மக்கள் வருவது வழக்கம். இதனால் இந்தப் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை காணப்படுகின்றது.
இதே நாள் 2 -03- 2013 அன்று குருநாகல் எத்துக்கல்புர விஹாரையில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இவ்விரு சம்பவம் தொடாபாக குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இன்று மாலையில் ஸ்ரீ. சுதந்திரக் கட்சி முஸ்லிம் அமைப்பின் குழுவினர் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர் இந்தச் சந்திப்பின் போது குருநாகல் மாவட்ட ஸ்ரீ சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாரும் கலந்து கொள்ளவுள்ளார் அவர் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளார்.
ஏனைய மாவட்டங்களை விட குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதையும் எத்துகல்புரவ விஹாரை எல்லைக்குள் பகிரங்கமாக இரு பதாதைகள் போடப்பட்டுள்ளதையும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை குருநாகல்,மெல்சிரிபர ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கூட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
- இ. அம்மார்

No comments:

Post a Comment