Wednesday, March 6

புதிதாக ஹலால் சான்றிதழ் கோரப்படுவதாக கூறப்படுவது பொய் : ஞானசார தேரர்






புதிதாக நிறுவனங்கள் ஹலால் சான்றிதழை கோருவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஹலால் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அதனை வாபஸ் பெறுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகிறோம். அந்த வகையில் ஏற்கனவே ஹலால் சான்றிதழை பெற்றிருந்த ஏராளமான நிறுவனங்கள் அதனை வாபஸ் பெற்றுள்ளன. புதிதாக நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்காக விண்ணப்பிப்பதாக தெரிவிக்கப்படுவது பொய்யாகும்.

முஸ்லிம்கள் இதற்கு முன்னரும் ஹலால் உணவை உட்கொண்டுள்ளனர். அப்போது ஹலால் சான்றிதழ் இருக்கவில்லை. எனவே ஹலால் சான்றிதழ் தேவையற்றது. ஹலால் உற்பத்தி முறையும் தேவை அற்றது. இது பெளத்த நாடு. இங்கு ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது. அத்துடன் இன்னுமொரு அரேபியாவாகவும் இதனை மாற்ற இடம் வழங்கக்கூடாது. என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment