அரசமருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் நோயாளர்கள் சிகிச்சை முடிந்து வீடு
திரும்பும் போது அவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை தொடர்பில்
பற்றுச்சீட்டொன்றை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறுவோர் தொடர்பிலேயே இந்த பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
குறித்த நோயாளர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையினை அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.
குறித்த நடைமுறையினை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து அமுல் செய்வதற்கு
சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உள்ளக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலை, களுபோவில,குருநாகலை
மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் இவ்வாறான பற்றுச்சீட்டு வழங்கும் நடைமுறை
கொண்டுவரப்படவுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பற்றுச்சீட்டு தொடர்பில் எவரிடமும் பணம் அறவிடப்பட
மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர்.நிகால் ஜயதிலக
தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையானது அரச மருத்துவமனைகளை தனியார்மயப்படுத்தும்
நடவடிக்கை என எண்ணிவிடக்கூடாது எனவும் அவ்வாறான எவ்வித தனியார்
மயப்படுத்தும் நடவடிக்கையும் இடம்பெறாது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment