Friday, March 15

ஹலால் முற்றாக அகற்றப்பட வேண்டும் : பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள்



pothubala 2சமூகத்தைப் பிரிக்கும் சமயச் சின்னங்களை பண்டங்களுக்கு உட்படுத்துவதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட இடமிருப்பதனால் சமயங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் எதுவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விநியோகிக்கக் கூடாதென பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளவில் இடம்பெற்ற மூன்று பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலே இக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயச் சின்னங்களை உட்படுத்துவதனால் பிரச்சினை மேலும் உக்கிரமடையாலம் என இங்கு மகாநயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹலால் சான்றிதழ் வழங்குவதனை நிறுத்துவதற்காகவும் தற்போது சந்தையிலுள்ள ஹலால் சான்றிதழ்களுடைய பொருட்களை மேலும் இரு மாதங்களுக்கு விற்பனை செய்ய இடமளிப்பதாகவும் ஜம்மியத்துல் உலமா தெரிவித்திருப்பது ஒரு மோஷடிச் செயலென்றும் சந்தையிலுள்ள ஹலால் பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் அஸ்கிரி பீட அநுநாயக கலகம ஸ்ரீ சந்ததாஸ மல்வத்தை பீட சிரேஷ்ட செயற்குழு உறுப்பினர் அலுக்கம தம்மானந்த, அஸ்கிரிய பிரதான பதிவாளர் ஆனமடுவே தம்மதிஸ்ஸ அஸ்கிரிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பெல்லன்ஷ விமல ரத்ன தேரர், அமரபுபுர மகா சங்க சபையின் பதிவாளர் பிராஹ்மணவத்தே, சீவலி ராமங்ய நிகாய அனுநாயக்க வறாகொட பிரேமரத்ன உட்பட பல தேரர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment