நாவல, வலாவ்வத்த
பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சிங்கள ரவாய
அமைப்பைச் சேர்ந்த பிக்குகளும் அவர்களோடு இணைந்த குண்டர்களும் குறித்த வீடு
மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில்
மத பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறியே வெள்ளிக்கிழமை மாலை
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக் குழுவினர் அவ் வீட்டுரிமையாளரின்
மனைவியை அவர்களது பிள்ளையின் முன்னிலையில் தாக்கும் காட்சி தனியார்
தொலைக்காட்சி ஒன்றின் கமெராவில் பதிவாகியுள்ளது.
இவ் வீட்டில் பௌத்த சிலைகளுடன் ஏனைய
மதங்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் படங்களும் அருகருகே
காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்து புத்தர்
சிலையை அகற்றுமாறு ஒரு பிக்கு குண்டர்களுக்கு உத்தரவிட்டதாகவும் மற்றொரு
பிக்கு அவ்வீட்டிலிருந்த பைபிளை வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ
இடத்துக்கு வருகைதந்த பொலிசார் இரு தரப்பினரையும் வெலிக்கடை பொலிஸ்
நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தமது வீட்டுக்கு வந்த
குண்டர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு தொகைப் பணம்
என்பவற்றை களவாடிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment