Tuesday, March 19

யாழ்ப்பாணத்திலும் கிறிஸ்தவ எதிர்ப்பு ?


யாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இந்த மாதா சொரூபம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கிராம சேவை அலுவலகர் மற்றும் யாழ். பொலிஸ் நிலையத்திலும்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த மாதா சொரூபம், கடந்த யுத்தத்தின்போது அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் மாதா சொரூபம் மக்களினால் வைக்கப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறினர்.
- தமிழ் மிரர்

No comments:

Post a Comment