ஐந்து
பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பொலிஸாரினால்
சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட் சந்தேகநபர் அநுராதபுரம் பிரதான
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி
வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அநுராதபுரத்தில் பெண்ணொருவரை திருமணம் முடித்துவிட்டு அவரிடமிருந்து 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடிச்சென்றமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேகநபர் ஐந்து பெண்களை திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணம் முடித்தன் பின்னர் அந்த பெண்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை களவெடுத்துக்கொண்டு குறித்த நபர் தப்பிச்சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களை பார்த்தே குறித்த நபர் ஐந்து பெண்களையும் ஏமாற்றி திருமணம் முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலவ்வ,களுத்துறை மற்றும் காலி போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த பெண்களையே குறித்த நபர் ஏமாற்றி திருமணம் முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment