ஹலால் சர்ச்சை மற்றும் ஏனைய பிரச்சினைகள்
தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதுக்கு சிபாரிசுகளை சமர்பிக்க நியமிக்கப் பட்ட
அமைச்சரவை உப குழு இன்னும் சில திங்களில் அதன் சிபாரிசுகளை ஜனதிபதுக்கு
சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில். இந்த நீண்ட சந்திப்பு
இடம்பெற்றுள்ளது. இனி நாட்டில் ஹலால் சான்றிதழ் நடைமுறை தொடர்பான முக்கிய
தீர்மானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஹாலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அரச
திணைக்களம் ஒன்று பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சரவை உபகுழு சிபாரிசை
முன்வைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில். அமைச்சரவை
உபகுழுவின் சிபாரிசு உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் ஹலால் சான்றிதழ்
வழங்கும் நடைமுறையை கொண்டிருக்குமா ? அல்லது , வெளிநாட்டுக்கு மட்டும்
என்று அறிவிக்கப்படுமா ?.
சான்றிதழ் வழங்கும் பணியில் இருந்து
ஜம்இயதுல் உலமா முற்றாக, முழுமையாக ஒதுங்கிக்கொள்ளப் போகிறதா ? என்பன போன்ற
கேள்விகள் எழுகிறது . அதேவேளை அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசை
ஏற்றுகொள்வோம் என்று ஏற்கனவே ஜம்இயதுல் உலமா அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது .
முஸ்லிம் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அந்த
அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளான
முஸ்லிம் அமைச்சர்கள் எந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தை அங்கு
கொண்டு சென்றுள்ளார்கள் என்பதை இன்னும் சில திங்களில் கண்டுகொள்ள
முடியும் !!