சட்டவிரோதமாக
முருகைக் கற்களை கடத்திச்செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சீனப் பிரஜைகள்
மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று அதிகாலை சீனாவின் ஷங்காய் நோக்கி செல்வதற்கு தயார் நிலையில் இருந்ததாக சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் மத்தளை விமான நிலைய நிர்மாணப் பணிகளுக்காக நாட்டிற்கு வருகை தந்திருந்ததாக விசாரணைகளின்போது அவர்கள் குறிப்பிட்டதாக சுங்க உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
இவர்கள் ஹிக்கடுவை கடற்கரைப் பகுதியில் முருகைக் கற்களை சேகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வனவிலங்குகள் மற்றும் தாவரவியல் சட்டத்தின் பிரகாரம் இத்தகைய செயற்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட முருகைக் கற்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment