Thursday, March 28

முஸ்லிம் கடைகளை தெளிவாக அறிந்துகொள்ள சிங்கள கடைகளில் பௌத்த கொடி

வரகாபொலை நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களிலிருந்து பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களை வேறாக பிரித்து அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு நேற்றிரவு வரகாபொலை நகரில் உள்ள சகல பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களிலும் பெரிய அளவிலான பௌத்த கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.  
எதிர்வரும் சித்தரை புத்தாண்டை ஹலால் இன்றி கொண்டாடுவோமென,  பொது பல சேனா கூறி வரும் இந்நிலையில் சிங்களவர்களாகிய எமக்கு ஹலால் வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. 
இதுபற்றி அறிவிக்கப்பட்டவுடன் வரகாபொலை பொலிஸார் ஒட்டப்பட்டிருந்த சகல சுவரொட்டிகளையும் உடன் அகற்றியுள்ளார்கள். இவ்வாறு பௌத்த கொடிகள் தொங்கவிடப்படுவதன் மூலம் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை வேறுபடுத்திக்காட்டுவதனூடாக பெரும்பான்மையினர் இந்த கொடிகள் உள்ள கடைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

No comments:

Post a Comment