தான் ஹலால் தொடர்பில் தனியார் ஊடகம்
ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உலமா சபையை சார்ந்த சிலரால்
தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்
தெரிவித்ததாவது, உலமா சபையின் ஹலால் பொறிமுறை குறித்து அவர்களின்
நிலைப்பாட்டுக்கு மாற்றமான சில உண்மைகளை நான் தெரிவித்தேன். இதன் காரணமாக
எனக்கு முக நூல் வாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான அச்சுறுத்தல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் அதில்
உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவற்றில் 15 அச்சுறுத்தல்களுக்கு எதிராக
நாளையதினம் கோட்டை பொலிஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவில்
முறையிடவுள்ளேன்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சட்டத்தரணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொலை
அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் உலமாசபையில் இருந்துகொண்டு சில அரச
சார்பற்ற நிறுவனங்களை நடத்துவோருக்கு தொடர்பிருக்கிறது. அவர்கள்
அடிப்படைவாதத்தை வளர்க்கின்றனர். என தெரிவித்தார்.
செய்தி மூலம் : விடிவெள்ளி
No comments:
Post a Comment