|
|||||||||||||||||||||||||||||
|
ஹலால் சான்றிதழ் பிரச்சினையால் சந்தையில் 20 வீதமான விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இறந்த விலங்குகள்,இரத்தம், பன்றி இறைச்சி போன்றவற்றை உணவாக உட்கொள்ளக் கூடாது என்றே இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர வேறு எந்தவொரு உணவுப் பண்டங்களையும் இஸ்லாம் ஹராமாக குறிப்பிடவில்லை. எவ்வாறெனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஹராம் உணவுகளைக் கூட ஒருவர் உட்கொள்ள முடியும் என்றே குர்ஆன் கூறுகிறது.ஹலால் சான்றிதழை வழங்குவதற்கான எந்தவொரு சட்ட ரீதியான உரிமையும் அகில இலங்கை ஜமயத்துல் உலாமாவிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. | |||||||||||||||||||||||||||||
Thursday, March 7
முஸ்லிம்கள் ஹராம் உணவுகளையும் உட்கொள்ள முடியும்: சம்பிக்க விளக்கம்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment