அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி ஹலால்
நெருக்கடியின் போது கண்ணீர் விட்டழுத சந்தர்ப்பமொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கியஸ்தர்களுடன் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மூன்று முறை பேசினார். அதே நேரம் மூன்று நிக்காயக்களதும் முன்னணி பிக்குகளையும் ஜம்மியத்துல் உலமா முக்கியஸ்தர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
இரு தரப்பினரும் மனம் திறந்து பேசியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர வேந்தர்
பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன களனி பல்கலைக்கழக வேந்தர் வலமிடியாவே
குசலதர்ம நாயக்க தேரர் இத்தாபான தம்மாலங்கார அனுநாயக்க தேரர், களனி
விஹாரையின் அதிபதி பேராசிரியர் கொள்ளுபிடிய மஹிந்த சங்கரக்கித தேரர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் போதே ஹலால்
நெருக்கடிக்கு இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண இணக்கம்
காணப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர்
ரிஸ்வி முப்தி ஒரு கட்டத்தில் அழுதுள்ளார். இப்பிரச்சினையில் அவர் இவ்வளவு
உணர்வுபூர்வமாக இருக்கிறாரே என்று பௌத்த தேரர்கள் உணர்ந்தனர் என
கலந்துரையாடலில் பங்குபற்றிய முன்னாள் எம்.ஆர்.ஈ.டி. சிறிசேன
தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment