ஏப்ரல் 1 ஆம் திகதிக்குப் பின்னர் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உணவுப்
பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை
உரிமையாளர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் அரசாங்க அலுவலகங்கள் அமைச்சுக்கள்
உள்ளிட்டவற்றின் சிற்றுண்டிச்சாலைகளுக்கு தாம் இதுதொடர்பில்
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மேற்படி சங்கத்தின் தேசிய அமைப்பானர் அசேல
சம்பத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நுகர்வோர்களுக்குக் கூட சிற்றுச்சாலைகளில் ஹலால் இலச்சினை
பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வது ஏப்ரல் முதல் தடை
செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொருட்டு ஹலால் இலச்சினை பொறிக்கப்படாத உணவுப் பொருட்களை கொள்வனவு
செய்து விற்பனைக்கு விடுமாறும் அவர் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு
அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment