Tuesday, March 19

முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி சிங்கள மக்களை பாதிக்கவில்லை

முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி சிங்கள மக்களை பாதிக்கவில்லை

முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சியானது சிங்கள மக்களை பாதிக்கவில்லை என இலங்கை புள்ளிவிபர வியல் திணைக்களத்தின் சனப்பரம்பல் பிரிவின் பணிப்பாளர் இந்து பண்டார தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் 74.9 வீதமானவர்கள் சிங்ளவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
1981ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 74 வீதமாகக் காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1981ம் ஆண்டில் 7 வீதமாக காணப்பட்ட முஸ்லிம் சனத்தொகை தற்போது 9.2 வீதமாக உயர்வடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் மக்களின் சனத்தொகை மாற்றம் சிங்கள மக்களின் சனத்n;தாகை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், 1981ம் ஆண்டு 12.7 வீத இலங்கைத் தமிழர்களும், 5.5 வீத இந்திய வம்சாவளித் தமிழாகளும் காணப்பட்டதாகவும், 2011ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 11.2 வீதமாகவும், இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 4.2 வீதமாகவும் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் சிங்கள மக்களை விடவும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வருவதாக வெளியான தகவல்களிலும் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment