இந்தியாவின் தமிழகத்தில் இலங்கையிலிருந்து ஆன்மீக சுற்றுலா
மேற்கொண்டிருந்த இரண்டு பெளத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து
குருநாகல் நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டடத்தில் குருநாகலை நகரில் வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது
பங்களிப்பை செய்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பெளத்த அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களும் கலந்துகொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment