இந்தியாவில் தேரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தொடர்பில்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தவிடம் கண்டன மகஜர்
கையளிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி இத்தேபான தம்மாலங்க தேரர் மற்றும் பேராசிரியர் பெல்லன்வில
விமலரத்ன தேரர் உட்பட எட்டு சிரேஷ்ட பௌத்த தேரர் இந்த கண்டன மகஜரில்
கையெழுத்திட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் பௌத்த தேரர்கள் தாக்கப்பட்டமையை வன்மையாக
கண்டிப்பதாகவும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பல வருட
கால நீண்ட வரலாற்றினை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீடிக்க
வேண்டும் எனவும்
இதனால் யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுத்திப்படுத்துவதுடன் இந்த பிரச்சினையை விரைவாக முடிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுத்திப்படுத்துவதுடன் இந்த பிரச்சினையை விரைவாக முடிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களும்
கண்டியிலுள்ள உதவி உயர் ஸ்தானிகரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment