பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களால்
எடுக்கப்பட்ட தீர்மானத்திற் அமைவாக 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரச
தலைவர்களது உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதை யாரும் மாற்ற
முடியாது என்று நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் உறுதிபடத் தெரிவித்த
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எதிர்வரும் நவம்பர்
மாதத்திற்கு முன்னதாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள்
சந்திப்பொன்றையும் நடத்தப்போவதில்லை என்பதை அதற்கு ஆதாரமாகவும்
குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 23 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின்கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் பீரிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பொதுலவாய அமைச்சர்கள் மட்டத்திலான செயற்பாட்டுக் குழுவின் அடுத்த
கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிக் கலந்துரையாடப்படவிருப்பதாக ஊடகங்களில்
செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் , இலங்கை விவகாரம் பொதுநலவாய
அமைச்சர்கள் மட்டத்திலான செயற்பாட்டு குழுவின் நிகழ்ச்சி நிரலில்
உள்வாங்கப்பவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அதன் தலைவருக்குத்
தெரிவித்திருப்பதாக
வெளிவிகார அமைச்சினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்த அதேநேரம்,
பொதுநலவாய மதிப்புகளையும் அடிப்படைக் கொள்கைகளையும் உறுதிப்படுத்தச்
சாதகமான சில நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுநலவாய அமைச்சர்கள் மட்டத்திலான
செயற்பாட்டுக் குழுவின் தலைவரான பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இலங்øக்கு
அழைப்பு விடுத்திருப்பதாக பங்களாதேஷ் தேசிய செய்தி முகவர் நிலையம் செய்தி
வெளியிட்டிருந்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க
இந்த அறிக்கைகளின் பின்னணி மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்டத்திலான
செயற்பாட்டுக் குழு தொடர்பாக தற்போதைய நிலைப்பாடு என்பன பற்றி சபைக்கு
முழுமையான விளக்கமொன்றை அமைச்சர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டார்.
No comments:
Post a Comment