தேசிய அடையாள
அட்டையை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்கான நடைமுறை ஒன்றை
செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்திவருவதாக ஆட்பதிவு திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் அடையாள அட்டையை
அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக பத்து வருடங்களுக்கு ஒரு முறை
அடையாள அட்டையை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவதாக
அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment