பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்ற நிலையில் குறித்த ஹலால்
இலச்சினை பொருட்களின் பொதிகளில் பொறிக்கப்படுவதே தமக்கு பிரச்சனைகளை
ஏற்படுத்துவதாக பொது பல சேனாவின் தலைவர் கிரமவிமலஜோதி தேரர் தெரிவித்தார்.
ஹலால் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஹலால் இலச்சினையை பொருட்களின் பொதிகளில் பொறிப்பதே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதற்குப்பதிலாக குறித்த பொருட்களின் உள்ளடக்கத்தை பொதிகளில் அச்சிடலாம். ஹலால் இலச்சினை பொறிக்கப்படுவதன் காரணமாக பல பெளத்த சிங்களவர்கள் தர்மச்சக்கரத்தை பொருட்களின் பொதிகளில் அச்சிட வேண்டுகின்றனர் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment