|
|||||||||||||||||||||||||||||
|
பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ள இச் சந்திப்பில் ஹலால் விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இச் சந்திப்பில் பௌத்த பிக்குகள் சிலரும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று உலமா சபையை சந்தித்துப் பேச்சு நடத்திய பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உற்பத்திகளை வழங்கும் வகையில் பொறிமுறை ஒன்றை வகுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதனையடுத்து முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உற்பத்திகளை வழங்குமாறும் முஸ்லிமல்லாதோருக்கான உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியமில்லை எனவும் உலமா சபை அறிவித்திருந்தது. இதேவேளை நேற்றைய தினம் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரிக்குமிடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. | |||||||||||||||||||||||||||||
Friday, March 8
உலமா சபையை கோதபாய இன்று சந்திக்கிறார்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment