பொது பல சேனா அமைப்பின் மா பெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கண்டியில் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டி மத்திய சந்தை
கட்டிடத்தொகுதிக்கு முன்பாக குறித்த ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதற்கான அறிவித்தல்கள் கண்டியின் மூலை முடுக்கெங்கும் சுவரொட்டிகள் மூலம் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வொன்று கூடலுக்கான அழைப்பு அனைத்து சிங்கள பெளத்தர்களுக்கும் சுவரொட்டிகள் மூலம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்று கூடலுக்கு வரும் அனைவரும் வெள்ளை ஆடை அணிந்து வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 17 ஆம் திகதி குறித்த அமைப்பின் பொதுக்கூட்டமானது கொழும்பின் புற நகர் பகுதியான மஹரகமவில் நடை பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment