Monday, March 25

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி


அமெரிக்க பொருட்களை இலங்கையில் புறக்கணிக்க வேண்டும் என சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை முன்வைத்து வெற்றியும் கண்டுள்ளது. அதனையடுத்தே சிங்கள  அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள மக்கள் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
அதற்கமைய நேற்று 23-03-2013 கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்கள அமைப்புகள், அமெரிக்கத் தயாரிப்புகளான கொக்கக்கோலா, பெப்சி மற்றும் அமெரிக்க கோதுமை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என கோசங்களையும் எழுப்பினர் என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment