Tuesday, March 5

ஹலால்: தெரிவுக் குழு அறிக்கை இருவாரங்களில்: கட்டுப்பட தயாரென்கிறது அ.இ.ஜ.உ







ஹலால் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிவுக்குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

பொது பல சேனாவின் எதிர்ப்பை தொடர்ந்து ஹலால் தொடர்பில் நாடாளாவிய ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பிலும் ஹலால் பொறிமுறை தொடர்பிலும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அறிக்கையே இவ்வாறு இரு வாரங்களுக்குள் சமர்பிக்கப்படவுள்ளது.

பொது பல சேனா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ,புத்தி ஜீவிகள்  மற்றும் வர்த்தக பிரமுகர்களிடம் கருத்துக்களையும் யோசனைகளையும் பதிவு செய்துகொண்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அதனடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை அடுத்த இருவாராங்களுக்குள் சமர்பிக்கவுள்ளது.

இதனிடையே பாராளுமன்ற தெரிவுக்குழு ஹலால் தொடர்பில் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தாம் கட்டுப்பட்டு செயற்படத்தயார் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஊடகப்பேச்சாளர் பாசில் எம்.பாரூக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment