Tuesday, March 5

அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான புத்தள ஆர்ப்பாட்டம் : பாயிஸ் மீது குற்றச்சாட்டு !

புத்தளம் நரக சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் புத்தளம் நகரின்  அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாத் தலையிடுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து   புத்தளத்தில் இன்று  ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் நகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புத்தளத்தில் வர்த்தகர் ஒருவரை தனது அமைப்பாளராக வைத்துக் கொண்டு அமைச்சர் ரிஷாத் புத்தளம் அபிவிருத்தியில் கைவைக்கிறார். இந்த நவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததுடன், அமைச்சருக்கு எதிரான சுலோகங்கiயும் ஏந்தி நின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம்  காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான அலி சப்ரியை விடிவெள்ளி தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் கருத்துக்கள் :  புத்தளத்தில் கால காலமாக இருந்து வந்த ஞாயிறு வாராந்த சந்தையை நகர சபையின் தலைவர் பாயிஸ் தனது தனிப்பட்ட நலன்களுக்காக சனிக்கிழமைக்கு மாற்றியிருக்கிறார்.
இந்த சந்தை மாற்றத்தை புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் விரும்பவில்லை. இதனால் வர்த்தகர்கள் வியாபார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவேதான் சனிக்கிழமை மாற்றிய வாராந்த சந்தை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நாம் கேட்டறிந்து வருகிறோம்.
எனவே நாம் செய்கின்ற பணியையும், புத்தளத்திலுள்ள மக்கள் எம்முடன் இருப்பதையும் கொஞ்சம் கூடப் பொறுக்க முடியாத நகர சபைத் தலைவர் பாயிஸ் தன்னுடைய குற்றங்களை மறைத்துக் கொள்ள சம்பந்தமே இல்லாத புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்.
தவிர இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளத்திலுள்ள எந்தவொறு பொதுமகனும் கலந்து கொள்ளவில்லை. காரணம் அமைச்சர் ரிஷாத் புத்தளத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அவ்வளவு அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறார். ஏன்றும் புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாதுக்கு நன்றியுயைவர்களாகவே இருப்பார்கள்.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்காளர்கள் பல்வேறு சதிகளை செய்து கொண்டிருக்கிhர்கள். இந்நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சரை வஞ்சிப்பது அநியாயமாகும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment