Tuesday, March 5

மஹர பள்ளிவாசல் எக்காரணம்கொண்டும் அகற்றப்படாது :பெளசியிடம் கஜதீர உறுதி







மஹர சிறைச்சாலை வளவுக்குள் அமைந்துள்ள பள்ளிவாசலின் செயற்பாடுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படவோ அகற்றப்படவோ மாட்டாது என உறுதியளித்த சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர  இதற்கான அறிவித்தலை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

குறிப்பிட்ட பள்ளிவாசலின் செயற்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பு நிறுத்தும் படியும் இவ்வுத்தரவு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் பணிப்பின் பேரிலேயே வழங்கப்படுவதாகவும் சிறைச்சாலை அத்தியட்சகர் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.


பள்ளிவாசலின் சுவரில் பன்றியின் படம் வரையப்பட்டு ஹலால் பன்றி என்ற வாசகம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பரிபாலன சபை அமைச்சர் பெளசியை சந்தித்து முறையிட்டதை அடுத்து அவர் அமைச்சர் கஜதீரவை தொடர்பு கொண்டு பள்ளிவாசலின் இருப்பை உறுதிப்படுத்தினார்.பள்ளிவாசலின் பதிவு தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் பெளசியினால் கஜதீரவிடம் சமர்பிக்கப்பட்டன.அப்போதே சிறைச்சாலை அமைச்சர் பள்ளிவாசலின் இருப்புக்கு உறுதி வழங்கினார்.

No comments:

Post a Comment