நிர்வாக காரணங்கள், மற்றும், காலதாமதம் ஆகிய காரணங்களை காட்டியே, பாகிஸ்தானின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது ஐ.நா.
பாகிஸ்தான் கொண்டுவர முயன்ற தீர்மானம் என்ன சொல்கிறது?
“இலங்கை அரசு இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது. எனவே, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இலங்கை இறைமை உடைய ஒரு நாடு. அதன் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது” என்பதே, அந்த தீர்மானத்தில் பிரதானமாக உள்ளது.
பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமல் போயிருப்பது இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகுதியை இழக்கின்றன. எனவே, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளையே இலங்கை இந்த முறை முழுமையாக நம்பியிருக்கின்றது.
பாகிஸ்தான் கொண்டுவர முயன்ற தீர்மானத்தை சரியான நிர்வாக அலகில் தாக்கல் செய்யவில்லை. அத்துடன், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment