Wednesday, March 13

முஸ்லிம்கள் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து ஓரணி சேர வேண்டும்.

                                         

நேற்று மாலை இலங்கை கிறிஸ்தவர்களின் உயர் சம்மேளனத்துடன் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டேன்,தற்போது நாட்டில் முடுக்கிவிடப்பட்டுள்ள முஸ்லிம் விரோத விஷமப் பிரச்சாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.


அங்கு அவர்களால் தெரிவிக்கப் பட்ட ஒருசில கருத்துக்கள் :


விஷமப் பிரச்சரங்களுக்குப் பின்னால் அரசியல் பொருளாதார இலக்குகள் இருப்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்படி அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரல்களோடு முரண்படும் பெரும்பான்மை மற்றும் அடுத்த சிறுபான்மை சமூகங்களுடன் சேர்ந்து சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்க ரீதியிலான உரிமைக் கோஷங்களோடு இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது.

இந்த சவால்களை தேசத்தின் சமாதான சகவாழ்விற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும்.

இந்த நாடு ஒரு மதத்தின் அல்லது இனத்தின் மத கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படல் வேண்டும் என்ற கோஷத்தினை பெரும்பான்மை சமூகம் மாத்திரமன்றி அடுத்த சமூகங்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இது பல்லின பல மத பல மொழி கலை கலாச்சரங்களைக் கொண்ட நாடாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தங்களுக்கு விடுக்கப் பட்ட தீவிரமான சவால்களின் போது உள் வீட்டு முரண்பாடுகளை பிளவுகளை வேற்றுமைகளைக் களைந்து ஓரணி நின்றதுபோல் முஸ்லிம்கள் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து ஓரணி சேர வேண்டும்.

முஸ்லிம்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு ஒரு மூடிய சமூகமாக இருக்காது அடுத்த சமூகங்களுடன் மதத் தலைவர்களுடன் மாத்திரமன்றி தேசிய விவகாரங்களில் ஒன்று பட்டு செயற்படல் வேண்டும்.

முஸ்லிம்கிராமங்களின் அங்கம் பக்கத்திலுள்ள பௌத்த கிறஸ்தவ இந்து மத குருமர்களுடன் நல்லுறவுகளை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மாத்திரமல்ல எந்த சமூகத்திற்கும் அநீதியிளைக்கப் படுமானால் கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக குரல் எழுப்புவார்கள் முஸ்லிம்களும் அவ்வாறு செயற்படல் வேண்டும்.

பேஸ் புக் மற்றும் இணையதளங்களில் விஷமப் பிரச்சாரம் இடம் பெரும் பொழுது அவற்றை ஸ்பெம் என முறையிடல் வேண்டும். நாங்களும் அவற்றை புத்தி சாதுரியமாக உபயோகிக்க வேண்டும்.

No comments:

Post a Comment