Wednesday, March 13

பாட்டனின் ஞாபகமாக 115 வருடங்களாக பேரன் பாதுகாக்கும் மிகப் பழைய பாண்!



மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கம், வைரம், தளபாடங்கள், வாகனங்கள், புகைப்படங்கள் என மேலும் பல பொருட்களை ஞாபகர்த்தமாக வைத்திருகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் 1899ஆம் ஆண்டிலிருந்து பாட்டனின் ஞாபகர்த்தமாக பாணொன்றை பாதுகாத்து வருகின்றார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 92 வயதான டெர்ரி ஓ கெல்லி என்ற நபரே மேற்படி பாணின் உரிமையாளர். 115 வருடங்கள்
பழைமையான பாணை கண்ணாடிப் பெட்டியொன்றில் பாதுகாத்து வருகிறார் டெர்ரி.
இது தொடர்பில் டெர்ரி கூறுகையில், இந்த பாணை எனது பாட்டனின் ஞாபகார்த்தமாக வைத்திருப்பதை எண்ணி பெருமையடைகின்றேன் எனத் தெரித்துள்ளார்.

ஹரிஸன் என்பவர் தனது இரண்டு மகள்களுக்கு சின்ன அம்மைக்கு தடுப்பூசி வழங்க மறுத்துள்ளார். இதனால் ஹரிஸனுக்கு நீதிமன்றத்தினால் தண்டப் பணம் கட்டுவதற்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டத் தவறியமைக்காக ஹரிஸனுக்கு 1899ஆம் ஆண்டில் 14 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை முடிந்து வெளியேறும் போது தெற்கு இங்கிலாந்திலுள்ள வேண்ட்வொர்த்தில் சிறையினால் வழங்கப்பட்ட பாணே அவரது பேரானால் இதுநாள் வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment