ஹலால் இல்லாத உற்பத்திப் பொருட்களை இனங்காண பௌத்த வர்த்தக சம்மேளனம் ஒன்றை
அமைக்க திட்டமிட்டுள்ளோம் என பொதுபல சேனா அமைப்பு நேற்று கொழும்பில்
நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உப குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில் அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள ஏழு அம்ச முடிவினை தாங்கள்
ஏற்கமுடியாது என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரையிலும் கலால் சான்றிதழ் வழங்குவதற்கு அறிவிடப்பட்ட
கட்டணங்களை மீளச் செலுத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தயாராக
இருக்கவேண்டும் எனவும் அவ்வூடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் முற்றாக கலால் சான்றிதழை நீக்க வேண்டும் என்பதுடன் பௌத்தர்கள்
யாரும் கலால் உணவை உட்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment