Saturday, March 16

தம்புளை விகாரையில் வசித்து வந்த பௌத்த தேரர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில்..


தம்புளை, லேனவ பிரதேசத்திலுள்ள விகாரையில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தம்புளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
ஜோதிடத்திற்கு புகழ்பெற்றிருந்ததாகக் கூறப்படும் மேற்படி தேரர், கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மரணமான நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாஇணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment