யாழ். பொது நூலகத்துக்கு 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை சீன அரசு வழங்கி உள்ளது.
யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் கொழும்பில் உள்ள சீன
தூதரகத்தின் முதலாம் நிலை செயலாளர் கியூ கியூஸ்பிங் கடந்த 27 ஆம் திகதி
சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
அத்துடன் நூலகத்தின் உசாத் துணைப் பகுதியையும் திறந்து வைத்தார்.
இவருக்கு நினைவுப் பரிசாக யாழ். மாநகர சபையின் சின்னத்தை வழங்கிக் கௌரவித்தார் வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி.
No comments:
Post a Comment