Thursday, March 28

இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்-BBS


1ஐ. பி. எல். கிரிக்கெட்  போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு  அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை  நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும்  நடவடிக்கைகள் குறித்து  கேட்டபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.
இது  பற்றி அவர் மேலும் கூறுகையில் ;

தமிழ் நாட்டு அரசியல்  வாதிகள் இன்று  நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும்  மறந்துவிட்டன போலும்.  அதனால்  தான் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டு வருகின்றது.
இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதை பௌத்த  சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையில் நாம் எமது கண்டனத்தைத்  தெரிவிக்கின்றோம்.-தகவல் தினக்குரல்
தமிழ் நாட்டு   அரசியல் வாதிகள் மேலும்  மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம்.
அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில்  உள்ள  பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை.
சென்னையில் நடைபெறவுள்ள ஐ. பி. எல்.  போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கெடுக்கக்கூடாது என தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், மாணவர் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.  அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment