“தெயட்ட கிருள” தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மாபெரும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பாறையில் இம்மாதம் 23ஆம் திகதிமுதல் ஆரம்பமான 2013 ஆம் ஆண்டிற்கான “தெயட்ட கிருள” தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மாபெரும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக முனைவைக்கப்பட்ட குற்றச்சாட்டுதொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
“தெயட்ட கிருள” செயலக பிரதம நிறைவேற்று அதிகாரியும், அமைச்சின் மேலதிக செயலாளருமான காந்தி குணவர்த்தன 39 மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளதாக, தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சு செயலாளரால் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே, தமது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள அறிவிப்பை குற்றப்புலனாய்வு விடுத்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான “தெயட்ட கிருள” தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் ஊழல் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணத்தினால் “தெயட்ட கிருள” செயலக பிரதம நிறைவேற்று அதிகாரியும், அமைச்சின் மேலதிக செயலாளருமான காந்தி குணவர்த்தன பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சு செயலாளர் எச்.எம் குணசேகர அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment