Wednesday, March 6

30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டது


டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களை பேலியாகொடை சுங்க களஞ்சியசாலையிலிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சுமார் 8 பெட்டிகளிலிருந்து 1.2 மில்லியன் சிகரெட்டுக்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சுங்க பணிப்பாளர் மாலி பியசேன தலைமையிலான விசேட அணி இவ்வாறு சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளது.
4 பெட்டிகளில் காணப்பட்ட சிகரெட்டுக்களை உரிய ஆவணங்களை பயன்படுத்தியும் எஞ்சிய 4 பெட்டிகளில் காணப்பட்ட சிகரெட்டுக்களை போலி ஆவணங்களை பயன்படுத்தியும் இறக்குமதியாளர்கள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அரசாங்கத்துக்கு 27 மில்லியன் ரூபா வரையில் வரி இழப்பு ஏற்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment