ஜெனீவாவில்
நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்
கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்
இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெனீவா விஜயம், தென்னாபிரிக்க விஜயம்
தொடர்பிலான விளக்கம், வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி
எதிர்ப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை
கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஜெனீவாவுக்கு செல்வதா
என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது இராஜதந்திரிகளின் கூற்றின்
பிரகாரம் கட்சி தலைவர் அல்லாது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
செல்வது குறித்து முடிவானதாக தெரியவருகின்றது.
அத்துடன் வட மாகாண சபைத் தேர்தல் எப்போது
அறிவிக்கப்படுகிறதோ அதன் போது இது குறித்து முடிவெடுப்பதெனத்
தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல் தந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இதன்
போது தெளிவுபடுத்தப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இணைவது குறித்தும் பேசப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்துக்கு கட்சி தமது ஆதரவினை
வழங்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment